சிம்புவுக்கு குரல் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவுக்காக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் இந்த பாடல் வரும் சுதந்திர தினத்தில் வெளியாகும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை ஏஆர் ரஹ்மான் பாடி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பாடல் இசை ரசிகர்களுக்கும் சிம்பு மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கும் விருப்பத்திற்குரிய பாடலாக இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்த மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டது

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.