குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?
- IndiaGlitz, [Sunday,May 05 2024]
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மறைந்த நடிகர் குமரிமுத்து அளித்திருந்த பேட்டியில் நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார். அந்த பாடல் பின்வருமாறு;
பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
இந்த பாடலில் ’யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம், நீங்கள் படித்தவர்கள்தான், இல்லை என்று சொல்லவில்லை, சில நூல்களை மட்டுமே கற்றவர், பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள். பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள், ஒரு பெரிய சூரியனின் ஒளியில் இருந்து காப்பது சிறு குடை தான்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு என்ன சொல்ல வருகிறது? யாரை குறிப்பிடுகிறது என்பது உங்களுக்கு புரிந்தால் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
சில கற்றார் பேச்சும் இனிமையே #tamilsrilanka https://t.co/hGjXm33obk via @YouTube
— A.R.Rahman (@arrahman) May 5, 2024