அப்பா-அம்மா பிரிவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன், மகள்கள் கூறியது என்ன? வைரல் பதிவுகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகிய இருவரும் பிரிவதாக முடிவு செய்து தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். இந்த முடிவு, ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர். ரகுமானின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த நேரத்தில் எங்களது தனி உரிமையை மதிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், "உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல், ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைதள பக்கத்தில் இரண்டு கையெடுத்து கும்பிடும் எமோஜியை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி, "மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றும், "கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இதை தாங்கும் மனவலிமையை கொடுப்பார்" என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரகுமானின் இன்னொரு மகளான ரஹீமா, தனது சமூக வலைத்தளத்தில், "இந்த விஷயத்தை மிகவும் தனி உரிமை மற்றும் மரியாதையுடன் நடத்திச் சென்றதற்கு நன்றி. உங்கள் அனைவரின் கருத்துக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
— Khatija Rahman (@RahmanKhatija) November 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments