மரியான் பாடலை மழைக்காக மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Friday,January 01 2016]

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடலின் வரியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த பாடலின் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....


நெஞ்சே எழு
நெஞ்சே எழு

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இம்மாதம் 16 ஆம் தேதி சென்னையிலும், 23 ஆம் தேதி கோவையிலும் நடத்தவுள்ள 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சிக்காக மரியான் பாடலான மரியான் படப் பாடலை இந்த நிகழ்ச்சியின் தீம் பாடலாக மாற்றியிருக்கிறார். அந்த பாடலின் வரிகள் பின்வருமாறு:

ஆயிரம் கனவுகள் கலைந்தாலும்
இருளால் காலம் உறைந்தாலும்
கண்ணீர் நதியாய் ஆனாலும்
தூங்கும் நகரம் மிதந்தாலும்
தமிழா நாமும் இணைந்தோமே
மீண்டும் எழுவோமே

நெஞ்சே எழு...
நெஞ்சே எழு'!''

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரைவிமர்சனம் 'மாலை நேரத்து மயக்கம் : மயங்க வைக்கும் காதல்

பிரபல இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி இயக்கிய முதல் படம்தான் 'மாலை நேரத்து இயக்கம்'. முதல்படமே அதுவும் ஒரு பெண் இயக்குனரின் படம் சென்சாரில்...

'கதகளி' கதை யாருடையது? பாண்டியராஜ் விளக்கம்

பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க -2' திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு?'

10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து விக்ரம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'அரிமாநம்பி' ...

19 பாடகர்கள் பாடிய சென்னை பாடல். விஷால் வெளியிட்டார்

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னையே தத்தளித்தது....

ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் கலைஞர்

2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில்...