ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிர்ச்சி முடிவு: ரசிகர்கள் கவலை
- IndiaGlitz, [Thursday,March 26 2020]
கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் வரை தனது தென் அமெரிக்க நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இருப்பினும் இசையால் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் ஒன்று சேர்வோம் என்றும் எனது அடுத்த சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பு தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அனைவரின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு வரை தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இல்லை என்ற ஏஆர் ரஹ்மான் எடுத்திருக்கும் முடிவால் அவரது வெளிநாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இப்போதைய ஒரே நோக்கம் கொரோனாவில் இருந்து மனித குலம் காப்பாற்ற்ப்படுவது மட்டும் தான் என்பதால் தான் ஏஆர் ரஹ்மான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
I am postponing the May & June North American tour until next year. At that time we can come together to once again share our music and community. I will be sure to update you over time, and I am praying for everyone’s health and safety. #ARRLive #NorthAmericaTour2020 (2/2)
— A.R.Rahman (@arrahman) March 26, 2020
There is nothing more important to me than sharing my music with my loyal fans throughout the world. Unfortunately, this is a moment when we should be in our homes with our families. So with the health and welfare of you, my fans, my family & my band, #NorthAmericaTour2020 (1/2)
— A.R.Rahman (@arrahman) March 26, 2020