'தி கேரளா ஸ்டோரி' பரபரப்புக்கு இடையே ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் இது குறித்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’தி கேரளா ஸ்டோரி' குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இசை புயல் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் உள்ள ஜமாத் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் ஒன்று நடந்த வீடியோவை பதிவு செய்துள்ள ஏஆர் ரஹ்மான் 'துணிச்சல், மனித குலத்தின் மீது அன்பு நிபந்தனை அற்றதாகவும், குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த ஒரு பெண் கணவனை இழந்த பின்னர் தனது மூன்று மகள்களோடு வசித்து வந்தார். இதில் மூத்த மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் மிகவும் கஷ்டப்பட்டார். இந்த நிலையில் அஞ்சுவின் தாய் அந்த பகுதியில் உள்ள மசூதி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது குடும்ப வறுமை குறித்தும் மகளின் திருமணம் குறித்தும் எழுதி, திருமணத்திற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை பெற்ற ஜமாத் குழுவினர் அஞ்சுவின் திருமண செலவை ஏற்பதாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து அஞ்சுவுக்கும் சரத் என்பவருக்கும் மசூதி வளாகத்தில் மேடை அமைத்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது என்பதும் அஞ்சுவுக்கு சீதனமாக 10 பவுன் நகை மற்றும் 2 லட்சம் கொடுக்க ஜமாத் கமிட்டியில் இருந்து கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்திற்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
இந்த திருமண வீடியோவை தான் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments