ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது? ஏஆர் ரஹ்மான்

  • IndiaGlitz, [Monday,November 18 2024]

மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் இருந்து தொடங்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏஆர் ரஹ்மான் எழுதி இயக்கிய ’Le Musk' என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜி திரைப்படத்திற்கு சென்னை ஐஐடி விருது வழங்கிய நிலையில் இதுகுறித்த விழாவில் அவர் பேசியதாவது:

உலக தரத்தில் ஒரு விர்ச்சுவல் திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதற்காக, அந்த படத்திற்கு விருது கிடைத்ததற்காக, அதுவும் நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் 37 நிமிடங்கள் படம் பார்த்தவர்கள் 10 நிமிட படமா என கேட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் படத்தை ரசித்தனர்.

இந்தியாவிலிருந்து ஏன் ஒரு ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கக்கூடாது? தொழில் வளர்ச்சி என்பது நம் நாட்டிற்கு மிகவும் அவசியம். புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.

VR என்பது வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில்நுட்பம். இதன் மூலம் கோயில்களை சுற்றி பார்க்கலாம், கல்யாண நிகழ்ச்சிகளை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். நம் நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் இசை மூலம் மனிதனுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சியும் வளர்ந்து வருகிறது. கற்பனைக்கு கட்டுப்பாடுகள் இல்லை, என்று அவர் கூறினார்.

அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

துபாய் தொழிலதிபர் தயாரிக்கும் படத்தை இயக்கும் சுந்தர் சி.. குஷ்புவின் சூப்பர் அறிவிப்பு..!

துபாய் தொழிலதிபர் தயாரிக்கும் அடுத்த படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாக குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'காந்தாரா சேப்டர் 1' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இன்னும் இத்தனை மாதங்களா?

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி வரும் 'காந்தாரா சேப்டர் 1'  ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதிய போஸ்டர் உடன் வெளியாகியுள்ள நிலையில்,

'கங்குவா' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம்.. ஜோதிகாவின் கொந்தளிப்பு பதிவு..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று எலிமினேஷன் ஆவது வைல்ட்கார்ட் போட்டியாளரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படும் நிலையில்,

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடந்த சில நாட்களாக சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்கு சென்னை மற்றும் சுற்றுப்புறத்திற்கு மழை இல்லை என தமிழ்நாடு வெதர்மேன்