இந்தியில் பேசிய தொகுப்பாளினி: மேடையில் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏஆர் ரஹ்மான் அவர்கள் கதை எழுதி, தயாரித்து இசையமைத்த ’99 சாங்ஸ்; என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இந்த பாடல் வெளியீட்டின்போது தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏஆர் ரஹ்மான் மேடையில் இருந்து இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’99 சாங்ஸ்’ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சில வார்த்தைகள் ஹிந்தியில் பேசினார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த ஏஆர் ரஹ்மான் ’ஹிந்தி’ என்று கூறி சிரித்துக் கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்கினார். பின்னார்’ நான் முதலிலேயே உங்களிடம் கேட்டேன், நீங்கள் தமிழில் தான் பேச வேண்டும்’ என்று கூறினார்.
அப்போது தொகுப்பாளினி ’நான் தமிழில் தான் சார் பேசினேன், சும்மா வெல்கம் செய்வதற்கு மட்டுமே ஹிந்தியில் பேசினேன்’ என்று கூற அதன்பிறகு ஏஆர் ரஹ்மான் சிரித்துக் கொண்டே ’சரி பரவாயில்லை’ என்று கூறினார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் ’தனக்கு இந்தி படங்களின் வாய்ப்புகள் அதிகம் வராததற்கு என்ன காரணம் குறித்து அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் தனது சொந்த திரைப்படத்தில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதை தடுத்து நிறுத்தியதற்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Thalaivaaaa @arrahman lmaoo pic.twitter.com/xD4qQDsWlp
— Sᴀʟᴍᴀɴ (@salmanzahir_) March 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments