கருப்பானவர்களுக்கு சிறந்த கதாபாத்திரங்கள் கொடுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கருப்பானவர்களுக்கு நல்ல கனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்றும் நம்முடைய நிறம்தான் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்
தென் இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில் அந்த மாநாட்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, ‘ 7 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் ஒருவர் சீனர், வட இந்தியர்கள் நிறமாக இருப்பதாகவும் அதனால் அவர்களின் படங்களை விரும்பி பார்ப்பதாக கூறினார். அதை கேட்டு நான் மிகவும் பாதிப்பு அடைந்தேன். தென்னிந்திய படங்களை அவர் பார்த்தாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது
தென்னிந்திய படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த வலிமையான கதாபாத்திரங்களை கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம்முடைய நிறம் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபோது, தமிழ்தான் இணைப்பு மொழி என ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய நிலையில் தற்போது கருப்பானவர்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்று பேசியுள்ளார்.
#CINEMAUPDATE | "கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த கதாப்பாத்திரங்களைக் கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம் நிறம்தான் பிடிக்கும்!" - ஏ.ஆர்.ரஹ்மான்#SunNews | #ARRahman | #SouthIndianMovies | #Cinema | @arrahman pic.twitter.com/x1JPg01mGg
— Sun News (@sunnewstamil) April 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments