பொன்னியின் செல்வன் குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் காலத்தால் அழியாத வரலாற்று காவியமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், இதில் ஜெயம் ரவி, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இதில் விக்ரம் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்கள் இந்த படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த ஸ்டில்களை பார்த்து தான் பெரும் ஆச்சரியம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏ.ஆர் ரஹ்மான் அவர்களே ஆச்சரியம் அடையும் அளவுக்கு இந்த படத்தின் ஸ்டில்களே இருக்கின்றது என்றால் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

ஆர்யா-சாயிஷா படத்தில் இணைந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத் மாஸ் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்

அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள

த்ரிஷாவின் அடுத்த படத்தின் உரிமையை வாங்கிய சென்னை பிரபலம்!

கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் த்ரிஷா நடிப்பில் உருவான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது

வேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா? இதோ ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிய நிலையில்

பா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா? பரபரப்பு தகவல் 

மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தடம்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.