பொன்னியின் செல்வன் குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் காலத்தால் அழியாத வரலாற்று காவியமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், இதில் ஜெயம் ரவி, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இதில் விக்ரம் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்கள் இந்த படத்தின் சில ஸ்டில்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த ஸ்டில்களை பார்த்து தான் பெரும் ஆச்சரியம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஏ.ஆர் ரஹ்மான் அவர்களே ஆச்சரியம் அடையும் அளவுக்கு இந்த படத்தின் ஸ்டில்களே இருக்கின்றது என்றால் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Last week DOP Ravivarman shared some stills from #ManiRatnam’s #PonniyinSelvan ..looks totally lit ?? ????
— A.R.Rahman (@arrahman) January 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com