ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி அளித்த பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா பதிலளித்துள்ளதை அடுத்து அவரது பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் Firdaus ஸ்டூடியோ என்ற புதிய இசை ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்த நிலையில் அந்த ஸ்டுடியோவுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சென்றார் என்பது குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். மேலும் Firdaus ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா இணைந்து இருந்த புகைப்படமும் ஏ.ஆர்.ரஹ்மானின் சமூகவலைதளத்தில் பதிவாகி வைரலாகி வருகிறது.
மேலும் தனது Firdaus ஸ்டூடியோவில் ஆர்கெஸ்ட்ரா வெளியிடுவதற்கு அற்புதமான இசைக்கோர்வையை இளையராஜா கம்போஸ் செய்து தருவார் என நம்புகிறேன் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் ஏஆர் ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மான் விரும்பியபடி இசைக்கோர்வைக்கான கம்போசிங் தொடங்கும் என்றும் இளையராஜா பதிலளித்துள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
request accepted.. will start composing soon. @arrahman@FirdausOrch #Mercuri https://t.co/oYxghate53
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com