ரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெகு அரிதாகவே ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் லாஜிக் புரோ எக்ஸ் என்ற மென்பொருளை வாங்கிய ஏஆர் ரஹ்மான் அது குறித்து தனது ரசிகர்களுடன் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். இந்த லாஜிக் புரோ எக்ஸ் மென்பொருள் குறித்து தனது அனுபவங்களையும் தனது கருத்துக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்

இந்த நிலையில் இது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக பதிலளித்தார். இந்த நிலையில் ஒரு சில குறும்புக்கார ரசிகர்கள் ஏஆர் ரஹ்மானிடம் கிண்டல் தொனியில் கேள்வி கேட்டனர். அந்த கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்தார். ஒரு ரசிகர் லாஜிக் புரோ எக்ஸ் மென்பொருளை பயன்படுத்த எனக்கு ஒரு ஆப்பிள் மேக் நீங்கள் பரிசாகக் கொடுத்தால் அதன் பிறகு நான் அதுகுறித்து அப்டேட் செய்கிறேன் என்று கூறி இருந்தார். அவருக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான் ’ஒரு பொருளை நீங்களே உழைத்து வாங்கினால்தான் அந்த பொருளை பயன்படுத்துவதற்கு மகிழ்ச்சி ஆக இருக்கும்’ என்று பதிலளித்துள்ளார். ரஹ்மானின் இந்த அர்த்தமுள்ள பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது

மேலும் இதே போன்று ஒரு சில குறும்புத்தனமான கேள்விகளுக்கு பொறுமையாக அவர்கள் பாணியிலேயே கோபப்படாமல் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More News

பிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்!

திரைப்படங்களுக்கு இருப்பது போல் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசம், வன்முறை ஆகிய காட்சிகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 9 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் நிலவும் புதிய சர்ச்சை??? உலகப் போருக்கான அறிகுறியா இது??? பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் காரணம்!!!

இந்தியாவில் கொரோனா ஒருபக்கம் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் வேளையில், இன்னொரு பக்கம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்து வருகிறது.

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்த 5 வயது சிறுவன்: சக விமான பயணிகள் நெகிழ்ச்சி

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக விமானத்தில் பயணம் செய்தது சக பயணிகளை நெகிழ வைத்துள்ளது 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: அதிபர் அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பள்ளிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று