நடிகை கஸ்தூரியின் கிண்டல் பதிவுக்கு டீசண்ட்டாக பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி, ஏஆர் ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? என கிண்டலுடன் பதிவு செய்த ட்வீட்டுக்கு ஏ ஆர் ரகுமான் டீசண்டாக பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் விருது வழங்கும் விழா நடைபெற்ற போது ஏஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஏஆர் ரகுமான் பேசியது குறித்து உங்கள் கருத்து என்ன? என சாய்ரா பானுவிடம் தொகுப்பாளர் கேட்டபோது ஹிந்தியில் அவர் பதிலளித்தார்.
அப்போது ’ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என்று ஏஆர் ரகுமான் கூறிய போது ’எனக்கு சரளமாக தமிழ் பேச வராது, அதனால் ஆங்கிலத்தில் உரையாட அனுமதி வழங்குங்கள்’ என்று கேட்டுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் ’என்னது ஏஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என கிண்டலுடன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏஆர் ரகுமான் மிகவும் டீசண்டாக ’காதலுக்கு மரியாதை’ என இரண்டே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
ஏஆர் ரகுமானின் இந்த பதிவுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் நடிகை கஸ்தூரியே அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட எமோஜிகள் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com