close
Choose your channels

'இந்தியன் 2' ரிலீஸ் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த வேலை.. நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்..!

Friday, July 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் ’பொன்னின் செல்வன்’ படத்தின் பாடல் பிளேலிஸ்ட் லிங்கை வெளியிட்டுள்ள நிலையில் ’இந்தியன் 2' ரிலீஸ் ஆகும் இன்றைய தினத்தில் அவர் வெளியிட என்ன காரணம் என்று பல்வேறு கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தின் பாடல் பிளே லிஸ்ட் லிங்கை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவுக்கு டைம் பார்த்து அடிக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு தனக்கு இசையமைக்க வாய்ப்பு அளிக்காததை மறைமுகமாக ஏ.ஆர்.ரஹ்மான் சுட்டிக் காட்டுவதாக இந்த பதிவு குறித்து புரிதல் இல்லாமல் பலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இன்று பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது கிடைத்துள்ளது. அதனை அடுத்து அவர் இந்த பாடலின் லிங்க்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த உள்நோக்கமும் அவருக்கு இல்லாத நிலையில் நெட்டிசன்கள் தவறான புரிதல் காரணமாக தவறான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர் என 5 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment