நான் ஏஆர் ரஹ்மான் ஃபேன் சார்.. 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' டிரைலரை வெளியிட்ட ஏ ஆர் ரஹ்மான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான’ நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரியிலும் ஒன்றாக படித்து இருக்கும் குழுவில் உள்ள நண்பர்களில் ஒருவருக்கு மட்டும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட, அந்த ஒருவர் செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைகிறது.
இதனால் பெற்றோர் அவரை திட்டும் நிலையில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி முன்னேறினாரா? நண்பர்கள் அவருக்கு எப்படி உதவினார்கள் என்பதுதான் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.
இந்த படத்தில் வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பதும் இருவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் குமரவேல், விசாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்பான் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஆனந்த் என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு காசிப் இசையமைத்துள்ளார். தமிழ்செல்வன் ஒளிப்பதிவில், பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இளைஞர்களை கவரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Glad to release the trailer of #NanbanOruvanVanthaPiragu. Wishing all the best to @imkaashif and the entire team
— A.R.Rahman (@arrahman) July 21, 2024
🔗 https://t.co/8dnG9CIzSf
A @vp_offl 🎁
A life by @ActorAnanth @BhavaniSre
Produced by @Aishwarya12dec @masala_popcorn
A @SakthiFilmFctry Release #NOVPfromAug2nd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments