close
Choose your channels

தடை செய்யப்பட்ட பகுதியா? அப்ப கண்டிப்பா உள்ளே போகணுமே.. ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட டிரைலர்..!

Thursday, July 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேச்சி’ என்ற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் ’விக்ரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை காயத்ரி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பேச்சி’. இந்த படத்தில் பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரில் காயத்ரி சங்கர் தனது நண்பர்களுடன் காட்டுக்குள் செல்லும் நிலையில் அங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் ஆர்வ மிகுதியால் செல்லும் நிலையில் அங்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

மலைவாழ் மக்கள் மட்டும் வாழும் தடை செய்யப்பட்ட பகுதியில் காயத்ரி குழுவினர் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள் இந்த இரண்டு நிமிட ட்ரைலரில் உள்ளது. ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில், ராஜேஷ் முருகேசன் இசையில், பார்த்திபன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment