தடை செய்யப்பட்ட பகுதியா? அப்ப கண்டிப்பா உள்ளே போகணுமே.. ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,July 11 2024]

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேச்சி’ என்ற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் ’விக்ரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை காயத்ரி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பேச்சி’. இந்த படத்தில் பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இந்த ட்ரைலரில் காயத்ரி சங்கர் தனது நண்பர்களுடன் காட்டுக்குள் செல்லும் நிலையில் அங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் ஆர்வ மிகுதியால் செல்லும் நிலையில் அங்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

மலைவாழ் மக்கள் மட்டும் வாழும் தடை செய்யப்பட்ட பகுதியில் காயத்ரி குழுவினர் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள் இந்த இரண்டு நிமிட ட்ரைலரில் உள்ளது. ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில், ராஜேஷ் முருகேசன் இசையில், பார்த்திபன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

உங்களுக்கு கோடீஸ்வர யோகம் இருக்கா.? நியூமராலஜி அதிசியம் -பாலசுப்ரமணியம் நியூமராலஜிஸ்ட்

பிரபல எண் கணித நிபுணர் பாலசுப்ரமணியம் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில் அளித்திருக்கும் இந்த காணொளியில், எண் கணிதத்தின் அற்புதங்களை பற்றி விரிவாக விளக்குகிறார்.

நாளை நயன்தாரா அடுத்த படத்தின் பூஜை.. ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் யார் என்பதை

மூன்று பாகங்களில் உருவாகும் ஷங்கரின் அடுத்த படம்.. யார் ஹீரோ? என்ன கதை?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வந்த நிலையில் 'இந்தியன் 2' திரைப்படம் நாளை வெளியாக

இந்த வாரம் ஓடிடியில் ரூ.100 கோடி வசூல் குவித்த சூப்பர் ஹிட் படம்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில்

முதல் முறையாக வெளியான வரலட்சுமி திருமண புகைப்படங்கள்.. மணமக்களின் காஸ்ட்யூம் என்ன தெரியுமா?

நடிகை வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண புகைப்படங்கள் முதல் முறையாக தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.