'குக் வித் கோமாளி' ஷிவாங்கி பாடிய பாடலை ரிலீஸ் செய்யும் இசைப்புயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஷிவாங்கி பாடிய பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சபரி- சரவணன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பொம்மா பொம்மா’ என்ற பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் ஷிவாங்கி பாடி உள்ளதாகவும் இந்த பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் நாளை அதாவது டிசம்பர் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலை எதிர்பார்த்து இசை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to inform that #BommaBomma song from #KoogleKuttapa, will be released by isai puyal @arrahman sir on Dec 25 at 11 AM.
— Ghibran (@GhibranOfficial) December 24, 2021
Sung by @TherukuralArivu & @sivaangi_k@Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @saregamasouth pic.twitter.com/inMRbhSvOF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments