'பொன்னியின் செல்வன்' வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை கம்போஸ் செய்யும் போது இயக்குனர் மணிரத்னம் அந்த பாடலுக்கு உண்டான காட்சியை விளக்கிய வீடியோவை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

முதலாவதாக பிரம்மாண்டமாக டிரம்ஸ் இசை ஒலிக்க வேண்டும் என்றும் அடுத்ததாக சக்கரவர்த்தி பொன்னியின் செல்வன் வரும் போது இரண்டாவது கட்ட இசை அலை இருக்க வேண்டும் என்றும் கிரீடத்தை வாங்கி அவர் அணியும் போது டிரம்ஸ் இசை சிகரத்தை அடையும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் கூறுவதை டிரம்ஸ் சிவமணி கவனத்துடன் கேட்கும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு பாடல் காட்சியை மணிரத்னம் விளக்கும் பாணியை பார்த்து ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.