எனது படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் மறுத்துவிட்டார்: பார்த்திபன் ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர் பார்த்திபன் தற்போது ’டீன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க மறுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் நடித்து, இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பார்த்திபன் ஒரு கமர்சியல் படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு ’டீன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 13 முதல் 15 வயது உடைய சிறுவர்களின் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க தான் ஏஆர் ரகுமான் அவர்களை அணுகியதாகவும், ஆனால் அவர் தனது வேலைப்பளு காரணமாக இசையமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தனக்கு செய்தி அனுப்பி உள்ளார் என்றும் இருப்பினும் தனது படத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் பார்த்திபன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பழகுதல் காதலால்
விலகுதலும் காதலால்
ஆதலால்….
ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை!
வரும் படத்திலும்-இரு
வரும் இணைவோமென நினைத்து
இயலாதபோது நண்பர் arr அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்.
பழகுதல் காதலால்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 15, 2023
விலகுதலும் காதலால்
ஆதலால்….
ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை!
வரும் படத்திலும்-இரு
வரும் இணைவோமென நினைத்து
இயலாதபோது நண்பர் arr அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில். pic.twitter.com/8OBTYFyIbd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com