'பாகுபலி' இசையமைப்பாளருடன் இணைந்த ஆஸ்கார் நாயகன்

  • IndiaGlitz, [Thursday,October 26 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் திரையுலகில் மரகதமணி என்று அழைக்கப்படும் இவர் தற்போது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை எம்.எம்.கீரவானி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் மிகச்சிறந்த மெலடி பாடல்களில் ஒன்று என்று எம்.எம்.கீரவானி கூறியிருந்தாலும் இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெறுகிறது என்ற ரகசியத்தை அவர் வெளியிடவில்லை

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இருப்பினும் இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைக்கும் '99 சாங்ஸ்',  சிரஞ்சீவியின் 'செயரா நரசிம்ம ரெட்டி' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தில் இந்த பாடல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் சந்தானம் நாயகி

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ஹரஹர மகாதேவகி' படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்பது அனைவரும் அறிந்ததே.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது: முதல்வரின் அதிரடி முடிவு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு நடைபெற வேண்டும்

விஜய் ரசிகர் மரணம்: நடிகர் அப்பானி ரவி கண்ணீர். .

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தமிழகத்தை போலவே கேரளாவிலும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி முன்னணி மலையாள நடிகர்களின் படங்களின் வசூலுக்கு இணணயான வசூலை பெற்றது.

சற்றுமுன் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், ரிலீஸ் ஆனதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும்

நெல்லை தீக்குளிப்பில் 4வது பலி: இசக்கிமுத்துவும் மரணம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேர்களும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் தீக்குளித்தனர்.