'பொன்னியின் செல்வன்' பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் என்னென்ன செய்தார் தெரியுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகியது என்பதும் திரையுலகினர். ரசிகர்கள் இந்த டீசரை பாராட்டி தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த டீசரில் உள்ள பின்னணி இசை மிக அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஏஆர் ரஹ்மான் இதற்காக இரண்டு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் தேடிப்பிடித்து வாங்கி அதனை பயன்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தம்பட்டம். பம்பை. உடுக்கை. உருமி. கொம்பு. பஞ்சமுக வாத்தியம். சுந்தரவளைவு உள்பட பல இசைக்கருவிகளை அவர் வாங்கி இந்த படத்தின் பின்னணி இசைக்காக பயன்படுத்தியுள்ளார்.

சில இசைக்கருவிகள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால் ஒருசில இசைக் கருவிகளை தாய்லாந்து நாட்டில் உள்ள பாலி பகுதியில் அவர் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது .

சோழர் காலத்து இசை ஒரிஜினலாக வரவேண்டும் என்பதற்காக ஏஆர் ரஹ்மான் மெனக்கெட்டு இந்த இசைக் கருவிகளை வாங்கி இருப்பதால் இந்த படத்தின் பின்னணி இசை மிகச்சிறந்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.