இசைப்புயலிடம் பாராட்டு வாங்கிய இளம் விண்வெளி புயல்… வைரல் டிவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போன்று விண்வெளித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என விரும்பியவர்தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி உதயக்கீர்த்திகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் தீயாக பரவின. காரணம் இச்சிறுமியின் எல்லையில்லா ஆர்வத்தைப் பார்த்து வியந்துபோன சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, அரசியல் பிரபலங்கள் சிலரும் இச்சிறுமியின் படிப்புக்கு உதவி செய்து இருந்தனர்.
அந்த வகையில் கவனம் பெற்ற சிறுமி உதயக்கீர்த்திகா இன்று போலந்து நாட்டில் நாசா விண்வெளி வீரர்களுடன் இணைந்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்தியா சார்பில் விண்வெளி ஆய்வில் கலந்து கொண்ட ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். இப்படி தனது கனவை முழு மூச்சாக நினைத்து உழைத்து வரும் விண்வெளி வீராங்கனை உயதக்கீர்த்திகாவிற்கு நமது இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து கொண்டு உள்ளார். அந்தப் பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த உதயக் கீர்த்திகா தன்னுடைய 12 ஆம் வகுப்பில் 92.5% மதிப்பெண்களை பெற்றதோடு கடந்த 2012 ஆம் ஆண்டு இஸ்ரோ நடத்திய விண்வெளி குறித்த ஆய்வுக் கட்டுரையில் தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்தார். அத்தருணத்தில் உக்ரைனில் விண்வெளி துறையில் பட்டம் படிக்க நினைத்த இவருக்கு பலரும் உதவி இருந்தனர். இப்படி பட்டம் பெற்ற விண்வெளி வீராங்கனை உதயக் கீர்த்திகா தற்போது போலந்து நாட்டில் நாசா விண்வெளி வீரர்களோடு சேர்ந்து விண்வெளிக்கு செல்ல பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Way to go Udhayakeerthika?????? pic.twitter.com/thWrUEXwOR
— A.R.Rahman (@arrahman) March 6, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments