பரபரப்பான இந்தி சர்ச்சைக்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் பதிவு!

நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசிய போது ’மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு பதிலாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கையில் ’ழ’கரத்தை ஏந்திக்கொண்டு பெண் ஒருவர் துள்ளிக் குதிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அவர் தனது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

‘தமிழணங்கு’ என்பதற்கு ’தமிழ் தேவதை’ என்ற பொருள் கூறும் வகையில் ஏஆர் ரஹ்மான் பதிவு செய்த இந்த பதிவு, இந்தியை ஆதரிப்பவர்களுக்கான பதிலடியாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப்: சென்னை சாதனை 

குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகளில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா புலம் மாணவிகள் பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்: பீஸ்ட்' 3வது சிங்கிள் பாடல்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டாகியுள்ளது.

கள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா

இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 17வது போட்டியில் நாளை மும்பையில் உள்ள டாக்டர் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட விமான பணிப்பெண்: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அஜித் நடிக்கவிருக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட் தயார் நிலையில் உள்ளது

சூர்யா அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்: இணையதளங்களில் வைரல்!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'ஓ மை டாக்' என்ற படம் ஏப்ரல் 21ஆம் தேதி