ஏஆர் ரகுமான் இசைக்குழுவின் பெண் கலைஞர் விவாகரத்து.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இன்று காலை அறிவித்த சில மணி நேரத்தில் அவரது இசைக்குழுவில் இருக்கும் பெண் கிதார் கலைஞர் ஒருவரும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் கிதார் கலைஞராக இருப்பவர் மோகினி டே. இவர் தனது கணவர் மார்க் ஹார்ட்சக் என்பவரை பிரிய இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
"கனத்த இதயத்துடன் நாங்கள் பிரிந்து விட்டோம் என்பதை அறிவிக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் பரஸ்பர புரிதல் மூலம் உண்டான பிரிதல் முடிவு. இருப்பினும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவரது இசைக்குழுவில் உள்ள பெண் கலைஞரும் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments