ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் பொக்கிஷம்: பாரதிராஜா புகழாராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' உள்பட பல பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது குழுவினர்களும் பாடவுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:
என் இனிய தமிழ் மக்களே! ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்து ஒரு சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுவதும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இதுபோன்ற ஒருசில நிகழ்ச்சிகளே அரிய நிகழ்ச்சி ஆகும்.
உலகில் உள்ள சில மனிதர்களை அதாவது எழுத்தாளர்களை, படைப்பாளிகளை கடவுளின் குழந்தை என்று கூறுவதுண்டு. அவர்களில் ஒருவர்தான் நமது ஏஆர் ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு சரி என்று தோன்றும் வரை ஒரு பாடலை முடிக்க மாட்டார். ஒரு பாடலை ஒரு மணி நேரத்திலும் அவர் கம்போஸ் செய்துள்ளார், ஒரு வருடம் கால அவகாசமும் எடுத்துள்ளார். அவருடைய தேடல் முடியும் வரை அவர் தேடிக் கொண்டே இருப்பார். ஆனால் அவர் தேடி முடித்த பின்னர் அவர் கொடுக்கும் இசை, ஒரு வைரம் போன்றதாக இருக்கும். இந்த வைரத்திற்காகத்தான் அவர் இவ்வளவு நாள் தேடி உள்ளார் என்பதை நாம் அறியும்போது நான் காத்திருந்த நாட்கள் நமக்கு ஒரு சில நொடிகள் ஆக மாறிவிடும்
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நமது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதை வெறும் புகழ்ச்சிக்காக, வாய் வார்த்தைகளால் கூறுபவை அல்ல, என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்' என பாரதிராஜா கூறியுள்ளார்
Here's what veteran actor and director #Bharathiraja Sir has to convey to fans and music lovers on account of #ARRahman Live In Chennai at YMCA ??????
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 7, 2019
Get ready for a Musical Fest on 10th August! ??????@offBharathiraja@arrahman @JsbSathish @idiamondbabu pic.twitter.com/P2jEvo2Wq9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout