ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் பொக்கிஷம்: பாரதிராஜா புகழாராம்

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' உள்பட பல பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது குழுவினர்களும் பாடவுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியதாவது:

என் இனிய தமிழ் மக்களே! ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குறித்து ஒரு சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகம் முழுவதும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இதுபோன்ற ஒருசில நிகழ்ச்சிகளே அரிய நிகழ்ச்சி ஆகும்.

உலகில் உள்ள சில மனிதர்களை அதாவது எழுத்தாளர்களை, படைப்பாளிகளை கடவுளின் குழந்தை என்று கூறுவதுண்டு. அவர்களில் ஒருவர்தான் நமது ஏஆர் ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு சரி என்று தோன்றும் வரை ஒரு பாடலை முடிக்க மாட்டார். ஒரு பாடலை ஒரு மணி நேரத்திலும் அவர் கம்போஸ் செய்துள்ளார், ஒரு வருடம் கால அவகாசமும் எடுத்துள்ளார். அவருடைய தேடல் முடியும் வரை அவர் தேடிக் கொண்டே இருப்பார். ஆனால் அவர் தேடி முடித்த பின்னர் அவர் கொடுக்கும் இசை, ஒரு வைரம் போன்றதாக இருக்கும். இந்த வைரத்திற்காகத்தான் அவர் இவ்வளவு நாள் தேடி உள்ளார் என்பதை நாம் அறியும்போது நான் காத்திருந்த நாட்கள் நமக்கு ஒரு சில நொடிகள் ஆக மாறிவிடும்

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நமது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதை வெறும் புகழ்ச்சிக்காக, வாய் வார்த்தைகளால் கூறுபவை அல்ல, என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்' என பாரதிராஜா கூறியுள்ளார்

More News

மீண்டும் இணைகிறதா 'என்னை அறிந்தால்' டீம்?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்தப் படமான 'தல 60' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கும்

பொள்ளாச்சி பெண்களை கேள்வி கேட்டவர்களுக்கு 'தல' சொன்ன பதில்: இயக்குனர் நவீன்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஹீரோ'. ' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் இணையும் புதிய ஜோடி

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் 'நின்னுக்கோரி'. இந்த திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது 

அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தந்தை விஜயகுமார்

பொதுவாக திரையுலகில் உள்ள அப்பாக்கள் தங்கள் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய சொந்தப் படம் தயாரிப்பது வழக்கம். ஆனால் நடிகர் அருண் விஜய் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு