முதல் பெண் இயக்குனரின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர் இயக்கும் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்து உள்ளவர் நாய்லா அல் காதிஜா. இவர் இயக்கிவரும் ’பாப்’ என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏஆர் ரகுமான் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் நாய்லா குறித்து இயக்குனர் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கூறிய போது, இயக்குனர் நாய்லா ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்றும் அவர் இயக்கிய படத்தின் சில காட்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் அதனால் இந்த படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்!

சியான் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரின் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதே இயக்குனருடன் மீண்டும் இணைய விக்ரம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரிலீஸ் தேதியை மாற்றி பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

வதந்தியால் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: பிரபல நடிகை புலம்பல்

வதந்தியால் தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லை என பிரபல நடிகை ஒருவர் புலம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அனிருத் பாடிய 'டான்' ஜலபுல ஜங்கு' பாடல்: சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மொத்த காண்டையும் இறக்கிட்டாப்ல: கமலின் 'பத்தல பத்தல' பாட்டை விமர்சனம் செய்த கஸ்தூரி

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்