விக்ரமின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கார் நாயகன்!

  • IndiaGlitz, [Saturday,July 13 2019]

விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை '96' திரைப்படத்தை விநியோகம் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வைகாம் 18' நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

விக்ரம் நடித்த 'புதிய மன்னர்கள்', 'ராவணன்' மற்றும் 'ஐ' ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? சூர்யா

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் புதிய கல்விக்கொள்கை குறித்த நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் சூர்யா பேசியதாவது:

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் உள்ளனர். 

பொன்னியின் செல்வனை அடுத்து மேலும் ஒரு தென்னிந்திய படத்தில் ஐஸ்வர்யாராய்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கேரக்டரான 'நந்தினி' கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக வெளிவந்த

முதல்முறையாக நடிகராக மாறும் நடிகர் மகத்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓரிரண்டு படங்களில் நடித்து வரும் நடிகர் மகத், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் ராஜேஷ் கண்ணா

கனிமொழியிடம் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்வி

கடந்த சில ஆண்டுகளாகவே மாடுகளை வைத்து அரசியல் செய்யும் நிலைமை நாடு முழுவதும் இருந்து வருகிறது.