அட்லி-ஷாருக்கான் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா? மாஸ் பாடல்கள் நிச்சயம்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அட்லீ-ஷாருக்கான் இணையும் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அட்லி இயக்கிய முந்தைய படங்களான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களிலும் ஏஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார் என்பதும் இரண்டு படங்களிலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின என்பதும் தெரிந்ததே. அதேபோல் அட்லீ-ஷாருக்கான் படத்திலும் ஏஆர் ரகுமான் இசை என்பது உறுதி செய்யப்பட்டால் மாஸ் பாடல்கள் உறுதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பட்டமளிப்பு விழாவில் முக்கவசம் அணியாத 11,000 மாணவர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

நஸ்ரியாவிடம் இப்படித்தான் காதலை சொன்னேன்… 7 வருடம் கழித்து வெளியான ஃபகத் சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் “நேரம்”, “ராஜா ராணி” போன்ற சில திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

கங்கை ஆற்றில் மிதந்துவந்த பிஞ்சு குழந்தை… முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா நேரத்தில் கங்கை ஆறு குறித்த எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வரிசை கட்டி நிற்கின்றன.

சிவசங்கர் பாபாவை செருப்பால் அடிக்க அனுமதியுங்கள்: காவல்துறைக்கு தமிழ் நடிகை வேண்டுகோள்

சாமியார் சிவசங்கர் பாபாவை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடிக்க அனுமதியுங்கள் என தமிழ் நடிகை ஒருவர் காவல் துறைக்கு கோரிக்கை எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ பாத்துட்டு வந்து வாதாடுங்க.....! மதன் வக்கீலை விளாசிய நீதிபதி....!

மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாத அளவிற்கு உள்ளது, முதலில் அந்த வீடியோக்களை பார்த்து விட்டு அப்பறம் வந்து வாதிடுங்க, என வக்கீலை நீதிபதி விளாசியுள்ளார்.