மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன விசேஷம்?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருதினை வென்றவருமான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சாய்ராபானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று ஏ.ஆர்ரஹ்மான் - சாய்ராபானு திருமண நாளை முன்னிட்டு அந்த நாலை கொண்டாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்துள்ளார். ’அன்பு மட்டும் புரிந்து கொள்ளுதல்’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பதும் வாழ்த்துக்கள் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது, பொன்னியின் செல்வன், கோப்ரா, அயலான், வெந்து தணிந்தது காடு உட்பட சுமார் 20 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.