சுஷாந்த்சிங் மரணம்: பாலிவுட்டை மறைமுகமாக தாக்கினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது தெரிந்ததே. இருப்பினும் சுஷாந்த்சிங்கின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகே மறைமுகமாக ஒரு காரணம் என்று கூறப்படுகிறது
சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு மிகக்குறைந்த காலத்தில் வளர்ந்த சுஷாந்த்சிங்கின் அபரீதமான வளர்ச்சி பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு உறுத்தியதாகவும், இதனால் கடந்த ஒரு வருடமாக சுஷாந்த் சிங்கை பாலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக ஒதுக்கியதாகவும், இதனால்தான் சுஷாந்த்சிங் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சுஷாந்த்சிங் ரசிகர்கள் பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’என்ன ஒரு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் சுஷாந்த்சிங்... நீங்கள் சென்ற இடத்திலாவது நிம்மதியாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மானின் இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த்சிங்கின் மன உளைச்சலுக்கான காரணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டில் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
What a way to go Sushant ...Rest in peace in a better place #ripsushant
— A.R.Rahman (@arrahman) June 14, 2020
Slipper shot to bollywood industry, I appreciate your comment sir. RIP Sushant
— Vijay (@Vijay_2210) June 15, 2020
Sir, நீங்க yengaiyo potinga..... Very well said...shameful Bollywood.
— mansoor alam (@mosim93) June 15, 2020
Slipper shot to the Bollywood industry by Mozart of Madras...
— Sam Peter (@sampeter93) June 14, 2020
Sushant proved Cinema life is far different from real life ...
Now I realize why certain ppl are so calm even having such a huge fame...
" In a better place " ♥️
— ராயப்பன்™ (@KTF_Off) June 15, 2020
Slipper shot to Bollywood Mafia industry ??
Thug Life arr..???????? pic.twitter.com/Js24sTxefL
— பொன்னியின் செல்வன் (@RajDhonipk) June 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments