ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு வார்த்தையில் மறைந்துள்ள அரசியல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபகாலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரே ஒரு வரியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் வகையிலான பதிவுகளை பதிவு செய்து வருகிறார். 'பஞ்சாபில் தமிழ் வளர்கிறது' மற்றும், 'அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” போன்ற பதிவுகளில் இருக்கும் உள்ளர்த்தம் அனைவருக்கும் புரிந்ததுதான்
இந்த நிலையில் ஆங்கில வார்த்தையான AUTONOMOUS என்ற வார்த்தைக்கு கேம்பிரிட்ஜ் டிக்ஸ்னரியில் உள்ள அர்த்தம் குறித்த ஒரு பதிவை சற்றுமுன் பதிவு செய்துள்ளார். இந்த வார்த்தைக்கு கேம்பிரிட் டிக்ஸ்னரியில், 'independent and having the power to make your own decisions' என்று அர்த்தம் கூறப்பட்டுள்ளது. அதாவது 'எந்தவொரு முடிவையும் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் எடுக்கும் அதிகாரம்' என்பது இதற்கு பொருள்
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்ததன் நோக்கமென்ன? என்று பலரும் பலவகையில் தங்கள் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருசிலர் இதில் மறைந்துள்ள அரசியல் குறித்தும் கூறி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஒரு வார்த்தையை எந்த நோக்கத்தில் கூறியிருப்பார் என்று உங்கள் மனதுக்கு தோன்றுவதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்
AUTONOMOUS | meaning in the Cambridge English Dictionary https://t.co/DL8sYYJqgX
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments