மனைவியுடன் செல்பி எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்: '25+1' ஸ்பெஷல் தினமாம்!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராபானு அவர்களுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பகுதியில் ‘25+1’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ராபானு திருமணம் கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நடந்தது. இதையடுத்து இன்று ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ராபானு தம்பதியின் 25 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதனை குறிப்பிடும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ‘25+1’ என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருடைய இந்த பதிவுக்கு சுமார் 3 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு ‘ரோஜா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார் என்பதும், அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் ‘அட்ராங்கே ரே’, மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’, கெளதம் மேனனின் ‘நதிகளில்யே நீராடும் சூரியன்’ உள்பட பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உங்களால் அதை ஒருபோதும் பார்க்க முடியாது: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா

ஒரு வெற்றிகரமான மனிதரை பார்க்கும்போது அவருக்கு வெளிப்படையில் கிடைத்துள்ள புகழை மட்டுமே உங்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த புகழையும் பெயரையும் அடைய அவர் செய்த தனிப்பட்ட

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தின் நாயகி அறிவிப்பு!

பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம்

திருச்சி மாநாட்டில் திமுக அறிவித்த 7 செயல்திட்டம் குறித்து அதிமுக கூறும் அதிரடி விமர்சனம்!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழக எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7 செயல்திட்டங்களை திருச்சி மாநாட்டில் அறிவித்து இருந்தார்.

2016 இல் அதிமுக கூறிய வாக்குறுதிகளின் நிலைப்பாடு என்ன? விளக்கும் புது அறிக்கை!

தமிழகத்தில் இருமுறை வெற்றிப்பெற்று பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிமுக சிறப்பான ஆட்சியை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கோரோனா? பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய லாக்டவுன் கிட்டத்தட்ட 8 மாதங்கள் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டது.