அவர்களுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லையே: ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர். இதனால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரின் இறுதிச்சடங்கில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கூட இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவருக்கும் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியபோது, ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்பதும் இந்த படத்திற்காகத்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கள்ளக்குறிச்சியில் நேற்று வரை 15 பேர், இன்று ஒரே நாளில் 74 பேர்: கோயம்பேடு காரணமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 15 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு அடைந்து இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இம்மாவட்டத்தில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மின்சார கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது

சென்னை 'குடி' மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்: தமிழக அரசு அதிரடி

மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் அந்த தளர்வுகளில் முக்கியமானதாக மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்திருந்தது

பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி??? இன்ஸ்டாகிராமில் குரூப் சேட் செய்த பள்ளி மாணவர்கள்!!!

டெல்லியில் முக்கிய பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 வகுப்பு  பள்ளி மாணவர்கள் செய்த காரியம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

தமிழக முதல்வருக்கு P.T.செல்வகுமாரின் முக்கிய வேண்டுகோள்!

தமிழக அரசு வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்