இசைஞானியின் கருத்தை ஆதரித்த ஆஸ்கார் நாயகன்
- IndiaGlitz, [Thursday,November 26 2015]
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'நூற்றாண்டு விருதை பெற்ற இசைஞானி இளையராஜா, நாட்டில் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமானால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை ஒரு பாடமாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தார்.
இசைஞானியின் இந்த கருத்தை பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கார் நாயகனுமாகிய ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரித்துள்ளார். இன்று அதே கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், 'ஒருவருக்கு இசை தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவர் அடுத்தவர்களிடம் இரக்கம் காட்டும் குணம் உள்ளவராக இருப்பார் என்றும், அதனால் இசையை அனைவரும் கட்டாயமாக ஒரு பாடமாக பயில வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருகின்றோம் என்றும் அவருடைய முக்கிய கொள்கையான அஹிம்சையை அனைவரும் கடை பிடிக்க வேண்டியது தற்போதைய காலகட்டத்திற்கு அவசியம் என்றும் ரஹ்மான் மேலும் கூறினார்.