தொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
- IndiaGlitz, [Sunday,April 11 2021]
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி, இசை அமைத்து, தயாரித்த ‘99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் சென்னையில் நடைபெற்றபோது தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏஆர் ரஹ்மான் மேடையை விட்டு கீழே இறங்கிய வீடியோ கடந்த மாதம் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.
இது குறித்து ஏற்கனவே தொகுப்பாளினி தரப்பில் இருந்து விளக்கமளித்த நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ‘99 சாங்ஸ் திரைப்படம் இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஹிந்தி புரமோஷன் ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில் அன்றைய தினம் சென்னையில் தமிழக ரசிகர்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால் தொகுப்பாளினியிடம் நான் ஏற்கனவே ’தமிழில் தான் பேசவேண்டும், அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தேன்.
ஆனால் அவர் அந்த படத்தில் நாயகனான எஹான் அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஒரு சில வார்த்தைகள் இந்தியில் பேசினார். அதனால் நான் அவரிடம் ‘ஹிந்தி’ என கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன். இது முழுக்க முழுக்க ஒரு ஜோக் தான் எந்தவிதமான சீரியஸ் நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு நிகழ்ச்சி எப்பொழுதும் போல் சுமூகமாகவே நடந்தது. ஒரு சிலர் நான் கோபப்பட்டதாக கமெண்ட் செய்தனர். அது முழுக்க முழுக்க தவறு’ என்று ஏஆர் ரஹ்மான் அளித்துள்ளார்.