பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்திய விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை AI மூலம் ஏஆர் ரஹ்மான் பயன்படுத்திய நிலையில் பாடகர்களின் குரலை உரிமை பெறாமல் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து பரவியது. இந்த சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’திமிறி எழுடா’ என்ற பாடலில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர்களின் குரல்களை ஏஆர் ரஹ்மான் பயன்படுத்தியிருந்தார்.

இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவிகொண்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாடகர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று, அதற்கேற்ற சன்மானமும் வழங்கப்பட்டு, அதன் பிறகே அவர்களது குரல் பயன்படுத்தப்பட்டதாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் AI தொழில்நுட்பம் என்பது ஒரு அருமையான தொழில்நுட்பம் என்றும் அதை முறையாக பயன்படுத்தினால் ஒருபோதும் அச்சுறுத்தலோ தொல்லையோ இருக்காது என்றும் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து கடந்த சில நாட்களாக இருந்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.