செல்ல மகளுக்கு கிடைத்த பட்டம்.. பெருமையுடன் பதிவு செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது செல்ல மகளுக்கு கிடைத்த பட்டம் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் - சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் ஏஆர் அமீன் என்ற மகன் உள்ளார் என்பதும் இதில் கதீஜா இசையமைப்பாளராகவும் ஏஆர் அமீன் பாடகராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் திரையுலகில் சம்பந்தப்படாமல் இருக்கும் ரஹீமா தற்போது துபாயில் கேட்டரிங் கல்லூரியில் படிப்பை முடித்துள்ள நிலையில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனது செல்ல மகள் ரஹீமா பட்டம் வாங்குவதை ஏஆர் ரஹ்மான் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’ஒரு தந்தையாக ரொம்ப பெருமைப்படுகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ள நிலையில் ஏஆர் ரஹ்மான் மகள் கேட்டரிங் துறையில் மிகப்பெரிய சாதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.