இதையெல்லாம் மறந்து விட்டு பேச வேண்டாம்.. ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் ஆவேச பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏஆர் ரகுமான் சமீபத்தில் சென்னையில் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின் சொதப்பல் காரணமாக ஏஆர் ரஹ்மானுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனார்.
ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஏஆர் ரஹ்மான் ஒரு மதவாதி என்றும் காசுக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்றும் கடுமையான விமர்சனம் வைத்தனர். ஆனால் இந்த விமர்சனத்திற்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் அளித்திருந்தார்.
ஒரு இசை நிகழ்ச்சி நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே ஒரு இசையமைப்பாளரின் எண்ணமாக இருந்தது, வெளியே நடக்கிறது என்பதை தெரியாமல் இருந்து விட்டேன், இருப்பினும் இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன், நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் '2016 ஆம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
2018 ஆம் ஆண்டு கேரளாவில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி அந்த பணத்தை அவர்களுக்கு உதவி செய்தார். கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அடிப்படை வசதிகள் தேவைப்படும் பல குடும்பங்களுக்கு அவர் உதவி செய்தார்.
மேலும் 2022 ஆம் ஆண்டு லைட்மேன் குழுவினர்களுக்காக ஒரு இலவச இசை நிகழ்ச்சியை நடத்தி அவர்களது குடும்பங்களுக்கு உதவினார். இதையெல்லாம் மறந்து விட்டு அவர் மீது ஒரு சில மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, இது மிகவும் மலிவான அரசியல் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
🙏🙏🙏 pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments