ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: வைரல் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Saturday,May 07 2022]
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா-ரியாஸ் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா, ரியாஸ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது .
திருமண மண்டபத்தின் வாசலில் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் வரவேற்பதாக அழகிய பெயர் பலகையும், அந்த திருமண மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்பட்டும் இருந்தன.
இதனை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா மற்றும் மருமகன் ரியாஸ் ஆகிய இருவருக்கும் தமிழ் திரையுலக பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.