ஆஸ்கார் விருதை நெருங்கிய 'ஆர்.ஆர்.ஆர்' : வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை நெருங்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக 14 பிரிவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில் அதில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சிறந்த பாடல்கள் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினை பெற்றுள்ள இந்த பாடல் ஆஸ்கார் விருதை பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ‘ஆர்.ஆர்.ஆர்’ குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'நாட்டு நாட்டு’ பாடல் 95வது ஆஸ்கார் விருதுகள் சிறந்த பாடலுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். நாம் கண்டிப்பாக சரித்திரம் படைப்போம், இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

நடிகர் ஆனந்த்ராஜ் மகன், மகளை பார்த்திருக்கிங்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தமிழ் திரை உலகின் பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ் என்பதும் இவர் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

'வலிமை' பட நடிகர், பிக்பாஸ் போட்டியாளர்: 'குக் வித் கோமாளி சீசன் 4 குக்குகள் லிஸ்ட்!

அஜித் நடித்த 'வலிமை' பட நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆகியோர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

த்ரிஷாவின் 'ராங்கி' உள்பட இந்த வார ஓடிடி ரிலிஸ் படங்கள்: முழு விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'வாரிசு' வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்த 'துணிவு' விநியோகிஸ்தர்: வைரல் வீடியோ

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களுமே

சினேகாவின் குட்டிப்பாப்பாவுக்கு பிறந்த நாள்.. க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் புன்னகை அரசியான சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.