ஆஸ்கார் விருதை நெருங்கிய 'ஆர்.ஆர்.ஆர்' : வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை நெருங்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக 14 பிரிவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில் அதில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சிறந்த பாடல்கள் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினை பெற்றுள்ள இந்த பாடல் ஆஸ்கார் விருதை பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் ‘ஆர்.ஆர்.ஆர்’ குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'நாட்டு நாட்டு’ பாடல் 95வது ஆஸ்கார் விருதுகள் சிறந்த பாடலுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன். நாம் கண்டிப்பாக சரித்திரம் படைப்போம், இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Congrats @M_M_Keeravani garu ….I am sure you are going to win Along with Chandra bose ji ..best wishes to RRR team! https://t.co/EvRyEzgKoi
— A.R.Rahman (@arrahman) January 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments