மாதவனுக்கும், அவரது மனைவிக்கும் பாராட்டு தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவியின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சமீபத்தில் மலேசியாவில் நடந்த மலேசிய நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார். அவர் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு அனைத்திலும் தங்க பதக்கத்தை வென்றதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே இந்தியாவுக்காக அவர் பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ள நிலையில் தற்போது ஒரே போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது அவரது பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ’உங்கள் மகனை சிறப்பாக வளர்ப்பதற்காக நீங்கள் செய்த தியாகம் மற்றும் சரியான முடிவுகள் தான் அவரது வெற்றிக்கு காரணம். இதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பாராட்டுக்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Credits to you and your wife for the sacrifice and right decisions taken to nurture him ..God bless🌺 https://t.co/MYp2qrCzdL
— A.R.Rahman (@arrahman) April 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com