த்ரிஷாவுக்காக ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த குத்துப்பாட்டு.. இன்னொரு 'மட்ட' சாங் ரெடியா?

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் ‘மட்ட’ என்ற பாடலில், விஜய் மற்றும் த்ரிஷா அட்டகாசமாக நடனமாடி இருப்பார்கள் என்பதும், இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தே. இந்த நிலையில், த்ரிஷாவின் அடுத்த படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் ஒரு குத்துப் பாடல் கம்போஸ் செய்திருப்பதாகவும், அந்த பாடலின் நடன காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துடன் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜி படிப்பதற்கு வெளிநாடு செல்வதால், அவருடைய காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கமல் மற்றும் சிம்பு இணைந்து நடித்த ஒரு ஆக்‌ஷன் காட்சி சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதாகவும், அந்த சண்டைக் காட்சி அட்டகாசமாக உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அட்டகாசமான ஒரு பார்ட்டி பாடல் படமாக்கப்பட்டதாகவும், அதற்காக ஏ.ஆர். ரகுமான் ஒரு அசத்தலான குத்து பாடலை கம்போஸ் செய்துள்ளார் என்றும் தெரிகிறது. இந்த பாடலில் த்ரிஷா நடனம் ஆடுவதாகவும், அதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் ’தக்லைஃப்’ படக்குழு கோவாவுக்கு செல்வதாகவும், அங்கு சிம்பு, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், ’தக்லைஃப்’ குறித்து வெளியாகும் செய்திகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பெரியாருக்கு வாழ்த்து மட்டுமல்ல.. மரியாதையும் செய்த தவெக தலைவர் விஜய்.. திராவிட அரசியலா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அதன் பின்னர் சில நிமிடங்களில் தந்தை பெரியாருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட் பதிவு செய்த கமல்-ரஜினி.. யாருக்கு வாழ்த்து?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இருவரும் தங்கள் எக்ஸ் பக்கங்களில் அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

தனுஷின் அடுத்த படம்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷின் 50வது திரைப்படமான "ராயன்" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின், அவர் தனது 51வது படமான "குபேரன்

ஓடிடியில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  'டிமான்ட்டி காலனி 2'. எந்த ஓடிடி? என்ன தேதி?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்  இரண்டாம் பாகமான  'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று

இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகிய நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில்,