பூமித்தாய்க்காக ஒரு பாடல்: உலக இசை மேதைகளுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
- IndiaGlitz, [Friday,April 24 2020]
நேற்று அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் செய்த ’ஹேண்ட்ஸ் அரெளண்ட் த வேர்ல்ட்’ (Hands around the world) என்ற இசை ஆல்பத்தின் இரண்டு நிமிட டிரைலரை வெளியிட்டார்.
இந்த பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், பூமித் தாயை மக்கள் கையாள வேண்டிய விதம், இயற்கையை வீணாக்காமல் கட்டிக்காக்க வேண்டிய கடமை ஆகிய கருத்துக்களை உள்ளடக்கி இந்த பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலின் டிரைலரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டவுடன் இந்த டிரைலர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கென் கிரேகன் தலைமையில் உருவான இந்த இசை ஆல்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடாஷா பெண்டிங்ஃபீல்டு, கோடி சிம்ப்சன், ஒபேரா இசைக் கலைஞர் ஜோனதன் சிலியோ ஃபரோ, எரிக்கா அட்கின்ஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளார். டிரைலைரில் வரும் பாடலின் வரிகளுக்கு ஏற்ப இயற்கை அன்னையின் விஷுவல் மிகப்பொருத்தமாக அமைந்திருப்பதால் இந்த பாடல் தற்போது உலகம் முழுவதும் ஹிட்டாகி வருகிறது
Hands Around The World - Trailer | AR Rahman | Ken Kragen | Neil Morgan https://t.co/1iBrSKl4wK via @YouTube
— A.R.Rahman (@arrahman) April 23, 2020