சித்தர் பாடலுக்கு கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: எந்த படத்திற்காக தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்தர் பாடல் ஒன்றுக்கு கம்போஸ் செய்ததாகவும் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த பாடல்கள் பெரும்பாலும் வார்த்தைகள் தெளிவாக கேட்காது என்ற குற்றச்சாட்டு இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அவருடைய மெலடி பாடல்களில் வார்த்தைகள் மிகவும் துல்லியமாகக் கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கிய உலகின் முதல் நான்லீனர் திரைப்படமான ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் ஒரு சித்தர் பாடல் இடம்பெற்றுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் கதைக்கு கடுவெளி சித்தர் எழுதிய பாடல் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்திபனிடம் கூறியதாகவும் அந்த பாடலை கேட்ட பார்த்திபன் இந்த பாடல் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என ஆச்சரியமாக கேட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து அந்த பாடல் அந்த வீடியோவில் ஒலிக்கிறது. இந்த பாடலின் முழுவடிவம் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கடுவெளி சித்தர் பாடலின் முதல் சில வரிகள் இதோ:
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
The nuances of tune and musical notations from @arrahman is completely out of the world!!! This Poem, a rare musical breed that narrates the life and after life, in the view of Kaduveli Sidhar.#PaapamSeiyathiru releasing on Wednesday at 11 AM from #IravinNizhal pic.twitter.com/17D7Jitx0x
— Divo (@divomovies) July 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com