மறைந்த தாயாருக்காக நினைவில்லம் கட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்: வைரல் வீடியோ!

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது தாயாருக்காக நினைவு இல்லம் கட்டி வருவதாக வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மீது மிகுந்த பற்றும் பாசமும் உடையவர் என்பதும் அவரது தாயார் கடந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது தாயார் இறந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் கட்டி வரும் ஒரு நினைவில்லம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது தாயாருக்காக கட்டப்பட்டு வரும் நினைவிடத்தின் காட்சிகள் உள்ளன.

இந்த நினைவு இல்லம் சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் இது முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட உடன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உயிருள்ள தாயாருக்காக ஒருபக்கம் ராகவா லாரன்ஸ் கோவில் கட்டியுள்ள நிலையில் மறைந்த தாயாருக்காக ஏ.ஆர்.ரஹ்மான் நினைவில்லம் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.