ஏஆர் ரஹ்மானை வாழ்த்த குவிந்த ரசிகர்கள்: மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏஆர் ரஹ்மானின் பிறந்த நாளன்று அவரது வீட்டின் முன் ரசிகர்கள் வாழ்த்து கூற குவிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற ரசிகர்கள் குவிந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் நேற்று சென்னையில் இல்லை என்பது தெரியவந்தது.
இருந்தாலும் வாழ்த்து கூற வந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மொபைல் போன் மூலம் வீடியோகாலில் ஏஆர் ரஹ்மானை தொடர்பு கொண்ட அவர் ரசிகர்களுடன் பேசும் உரையாடலுக்கும் ஏற்பாடு செய்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் வீடியோகால் மூலம் ஏஆர் ரஹ்மானுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏஆர் ரஹ்மான் வீட்டில் இல்லாவிட்டாலும் அவருடன் பேச வைக்க ரசிகர்களுக்கு வீடியோகால் மூலம் ஏற்பாடு செய்த அவருடைய மகளுக்கு ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments